ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய ஒரு சவரன் தங்கம்!
சென்னையில் கடந்த 12ம் தேதி வெள்ளிக்கிழமை ஒரே நாளில் இரு முறை தங்கம் விலை உயர்ந்ததால் ஒரு சவரன் 98960 ரூபாய்க்கு விற்பனை செய்யப் பட்டது. 13ம் தேதி சனி மற்றும் 14ம் தேதி ஞாயிறு தங்கம் விலையில் மாற்றம் இல்லை எனினும் 15ம் தேதி திங்கட்கிழமை காலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 99,680 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், மதியம் மீண்டும் சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்தது. வரலாறு காணாத இந்த உயர்வினால் 15ம் தேதி ஒரு சவரன் தங்கம் 1,00,120 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இந்தியா தென்னாப்பிரிக்கா இரண்டாவதுT20கிரிக்கெட் போட்டி- தென்னாப்பிரிக்கா வெற்றி
இந்தியா தென்னாப்பிரிக்கா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் 11ம் தேதி நடந்த இவ்விரு அணிகளுக்கிடையில் நடந்த இரண்டாவது T20 ஆட்டத்தில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. இதை அடுத்து 214 ரன்கள் இலக்குடன் வியலையாடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 162 ரன்களுக்கு ஆள் அவுட் ஆனது. இதனால் 62 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இவ்விரு அணிகளும் ஒன்றுக்கு ஓன்று
என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை (Let Them Be Kids)
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உட்பட்டோர் அனைத்து வகையான சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் மசோதா கடந்த ஆண்டு
நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது. இந்நிலையில் அங்கு 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர் சமூக ஊடகங்களைப் பயன் படுத்த விதிக்கப்பட்ட தடை 10ம் தேதி புதன்கிழமை முதல் அமுலுக்கு வந்தது. இது குறித்து அந்நாட்டு பிரதமர் அல்பனீஸ் கூறும்போதும் இந்த நடவடிக்கை சிறுவர் சிறுமியர் வாழ்வை மாற்றும் சீர் திருத்தமாக இருக்கும் என்று கூறினார்.
இந்தியாவின் மிக நீளமான கண்ணாடிப் பாலம் விசாகப்பட்டினத்தில் திறப்பு
இந்தியாவின் மிக நீளமான கண்ணாடிப் பாலம் ஆந்திர ,மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஒன்றாம் தேதி திங்கட்கிழமை திறக்கபப்ட்டது. 55 மீட்டர் நீளம் கொண்ட இந்த கண்ணாடிப் பாலம் 1000 அடி உயரத்தில் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலை உச்சியில் கட்டப்பட்டுள்ளது. 40 மில்லி மீட்டர் தடிமன் கொண்ட மூன்று அடுக்கு கண்ணாடி மற்றும் 40 டன் வலுவூட்டப்பட்ட எஃகுடன் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம் புயல் மற்றும் சூறாவளியைத் தாங்கக் கூடிய வகையில் கட்டப்பட்டுள்ளது.
இந்தியா தென்னாபிரிக்கா முதல் நாள் ஒருநாள் போட்டி - இந்தியா வெற்றி
இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஒருநாள் போட்டி ராஞ்சியில் 30ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்தது. அடுத்து 350 ரன்கள் இலக்குடன் விளையாடிய தென்னாபிரிக்கா அணி 49.2 ஓவர்களில் 332 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 17 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

புகைப்படங்களை அனுப்பத் தொடங்கிய 'நிசார்' (NISAR Satellite) செயற்கைக் கோள்
பருவ நிலை மாற்றங்களைக் கண்காணிக்க இஸ்ரோ, நாசா கூட்டுமுயற்சியில் வடிவமைக்கப் பட்ட 'நிசார்' செயற்கைக் கோள் கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக் கோள் புவியின் மேற்பரப்புப் புகைப்படங்களை எடுத்து அனுப்பத் தொடங்கி இருக்கிறது. இந்த செயற்கைக் கோள் அனுப்பிய கோதாவரி ஆற்றுப்படுகைப் பகுதி புகைப்படங்களில் மங்குரோவ் காடுகள். வயல்வெளி, நீர்நிலைகள் அனைத்தும் துல்லியமாக படம் எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் புவியின் மாற்றங்கள் குறித்து நுட்பமான ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் என எதிபார்க்கப் படுகிறது.

2026ம் ஆண்டிற்கான T20 உலக க்கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு
இந்தியா உட்பட 20 நாடுகள் பங்கேற்கும் பத்தாவது ICC T20 கிரிக்கெட் )உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 2026ம் ஆண்டு பெப்ரவரி 7ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடக்கிறது. இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் இந்தத் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. இதில் விளையாடும் அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. இந்த அட்டவணையின் படி, இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதல் போட்டி பெப்ரவரி 15ம் தேதி கொழும்புவில் நடை பெற உள்ளது.

பார்வயற்றோருக்கான மகளிர் T20 போட்டி - கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா
பார்வயற்றோருக்கான மகளிர் T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி டெல்லி, பெங்களூரு மற்றும் இலங்கையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியை வென்ற இந்திய அணி, இறுதிப் போட்டியில் நேப்பாளத்தை சந்தித்தது. இலங்கை கொழும்பில் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் முதலில் விளையாடிய நேப்பாள அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு114 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இந்திய அணி 12.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையைக் கைப் பற்றியது.

ஆஷஸ் கிரிக்கெட் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியா இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் முதல் டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் 21ம் தேதி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 172 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து 40 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 164 ரன் களுக்கு ஆல் அவுட் ஆனதால் ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப் பட்டது. 205 ரன்கள் இலக்குடன் அடுத்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் ஒன்றுக்குப் பூஜ்ஜியம் எந்த கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கிறது.

இந்தியா தென்னாபிரிக்கா இரண்டாவது டெஸ்ட் போட்டி 22ம் தேதி தொடக்கம்
இந்தியா தென்னாபிரிக்கா இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்கான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 22ம் தேதி கவுஹாத்தியில் தொடங்க உள்ளது. இந்த ஆட்டத்தில் கூடுதல் வீரராக நட்சத்திர ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி சேர்க்கப் பட்டுள்ளார்.

உலக ஏழைகள் தினம் - போப் லியோ சிறப்புப் பிரார்த்தனை
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16ம் தேதியை உலக ஏழைகள் தினமாக அனுசரிக்க கடந்த 2017ம் ஆண்டு அப்போதய போப்பாண்டவர் போப் பிரான்சிஸ் அறிவித்திருந்தார். அந்த வகையில் இந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி ஞாயிற்றுக் கிழமை உலக ஏழைகள் தினம் அனுசரிக்கபப்ட்டது. இதை முன்னிட்டு ரோம் நகரில் உள்ள வாடிகன் தேவாலயத்தில் போப் லியோ சிறப்புப் பிரார்த்தனை நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
ஹங்கேரி எழுத்தாளர் டேவிட் சலாய்க்கு புக்கர் பரிசு
இங்கிலாந்து அரசால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் புக்கர் பரிசு உலகளவில் உள்ள சிறந்த எழுத்தாளர்களுக்கு வழங்கப் பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசு ஹங்கேரியைச் சேர்ந்த எழுத்தாளர் டேவிட் சலாய் ( David Szalay) எழுதிய "Flesh" என்னும் நாவலுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த நாவலில் பூமிக்கும் மனிதனுக்கும் இடையிலான ஆத்மார்த்த உறவு குறித்து விவரிக்கப் பட்டுள்ள்ளது. லண்டனில் நடைபெற்ற விழாவில் டேவிட் சலாய்க்கு புக்கர் பரிசுக்கான கோப்பையும், 66000 டாலர் காசோலையும் வழங்கப்பட்டது
பறக்கும் கார்கள் உற்பத்தியைத் தொடங்கிய சீனா
தெற்கு சீனாவில் உள்ள குவாங் டோங் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலையில் முதல் பறக்கும் கார் தய்யரிக்கும் பணி தொடங்கப் பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. 1.20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த தொழிற்சாலையில் ஆண்டுக்கு 5000 பறக்கும் கார்கள் தயாரிக்கும் திறன் உள்ளது என்றும், இந்தத் தொழிற்சாலையில் ஆண்டுக்கு 10,000 பறக்கும் கார்கள் தயாரிக்கும் அளவிற்கு மேம்மபடுத்தப் படும் என்றும் , இது வரை உருவாக்கப் பட்ட தொழிற்சாலைகளிலேயே மிகப் பெரிய திறன் பெற்ற தொழிற்சாலை இது என்றும் கூறப்படுகிறது
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஐந்தாவது T 20 போட்டி மழையால் ரத்து - தொடரை வென்ற இந்தியா
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட T 20 கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசிப் போட்டி 8ம் தேதி சனிக்கிழமை பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 4.5 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கை விடப்பட்டது. இந்தத் தொடரில் ஏற்கனேவே நடந்த நான்கு போட்டிகளில் இந்திய அணி இரண்டுக்கு ஓன்று என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் ஐந்தாவது ஆட்டம் கை விடப்பட்டதால் இந்திய அணி இரண்டுக்கு ஓன்று கணக்கில் தொடரை வென்றது.