40 ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் இணையும் கமல் ரஜினி
இயக்குனர் சுந்தர் c இயக்கும் படத்தை கமல்ஹாசன் தயாரிக்க உள்ளதாகவும், இதில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் படம் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிவிக்கப்ப் பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் ரஜினிக்கு 173வது திரைப்படமாகும். கடந்த 1985ம் ஆண்டு வெளியான ராஃட்டார் என்ற ஹிந்தி திரைப்படத்தில் கமல் மற்றும் ரஜினி இணைந்து நடித்திருந்தனர். இப்போது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு சினிமாவில் மீண்டும் இருவரும் இணைகின்றனர்.
நடிகர் துல்கர் சல்மானின் காந்தா திரைப்பட ட்ரைலர் வெளியீடு
நடிகர் துல்கர் சல்மான் இயக்குனர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் காந்தா. இந்தப் படத்தில் சமுத்திரக்கனி , ராணா, ரகுபதி பாக்கியஸ்ரீ போஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் இம்மாதம் 14ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் ட்ரைலர் 4ம் தேதி செவ்வாய்க் கிழமை வெளியிடப் பட்டது