Monday Feb19, 2024
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டு வருகிறது. இதில் பிரான்ஸ் முதல் இடத்தில உள்ளது. ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான் சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் நாடுகளின் பாஸ்போர்ட் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் முலம் விசா இல்லாமல் 194 நாடுகளுக்குப் பயணம் செய்யலாம். பின்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன் மற்றும் தென் கொரியா நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 85வது இடத்தில உள்ளது.
பிரிட்டனில் உக்ரேன் அகதிகளுக்கு மேலும் 18 மாதங்கள் விசா நீட்டிப்பு
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷயா உக்ரேன் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதனால் இரண்டு லட்சத்து எண்பதினாயிரதுக்கும் அதிகமான உக்ரேன் நாட்டினர் பிரிட்டனில் அகதிகளாகத் தஞ்சமடைந்துள்ளனர். இந்நிலையில் பிரிட்டனில் அகதிகளாகத் தங்கியுள்ள உக்ரேன் நாட்டினருக்கு விசா மேலும் பதினெட்டு மாதங்கள் நீட்டிக்கப் பட்டுள்ளது. உக்ரேனில் தொடர்ந்து போர் நடந்து வருவதால் பிரிட்டனில் தங்கியுள்ள உக்ரேன் நாட்டவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த விசா நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது என்று பிரிட்டன் குடியேற்றத்துறை அமைச்சர் டாம் பெஸ்குரோ தெரிவித்தார்.
Sunday Feb 18, 2024
போர் நிறுத்தப் பேச்சுக்கு இடமில்லை நேத்தன்யாஹூ
இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போர் நடந்து வரும் நிலையில் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின்
தலையீட்டில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாஹூ கூறும்போது, பாலஸ்தீனத்தை ஒருதலைப் பட்சமாக அங்கீகரிப்பதை இஸ்ரேல் கடுமையாக எதிர்க்கும். ஹமாஸுடன் போர் நிறுத்தப் பேச்சு வாரத்தை இல்லை, ஹமாஸ் அமைப்பினரின் கோரிக்கை ஏமாற்றும் வகையில் உள்ளது, அவர்களின் கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று நேத்தன்யாஹு கூறினார்.
Saturday Feb 17, 2024
தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை
தமிழ் நாடு முழுவதும் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடைவிதித்து தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் ல் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஞ்சு மிட்டாயில் புற்று நோயை உண்டாக்கும் வேதிப் பொருட்கள் இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளதால் தமிழகத்தில் தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் தடை செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகிறதா என்பதைக் கண் காணிக்க உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
Friday Feb.16, 2024
காசா எல்லையில் புதிய சுவர் எழுப்பும் எகிப்து
இஸ்ரேல் காஸாவின் ரபா பகுதியில் தனது இராணுவ நடவடிகைகளை விரிவு படுத்த உள்ள நிலையில் எகிப்து நாடு காஸாவின் எல்லையை ஒட்டிய தனது பிராந்தியப் பகுதிகளில்சுவர் எழுப்பி வருவதை செயற்கைக் கோள் வழியாக பெறப்படும் படங்களிலிருந்து அஸோஸியேட் பிரெஸ் உறுதி செய்துள்ளது. சுவர் எழுப்பி வருவது குறித்து எகிப்து அதிகாரப்பூர்வமான எதையும் அறிவிக்கவில்லை
Thursday Feb 15, 2024
புற்று நோய்க்கு எதிராக விரைவில் தடுப்பூசி - பூட்டின் அறிவிப்பு
உலகம் முழுதும் பல அமைப்புகள் புற்று நோய் தடுப்பூசியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்ய அதிபர் பூட்டின் மாஸ்கோவில் எதிர்காலத் தொழில் நுட்பம் குறித்து உரையாற்றிய போது, எங்கள் ஆரய்ச்சியாளர்கள் புற்று நோய்க்கான தடுப்பூசியைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் வெற்றியை நெருங்கி விட்டார்கள் என்றும் தனிப்பட்ட வகையில் அவை நோயாளிகளுக்குப் பயன் படும் வகையில் பொது பயன்பாட்டிற்கு விரைவில் வரும் என நம்புகிறேன் என்றும் கூறினார்
மெட்ரோ ரயில்களில் பயணிக்கும் பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்பாடு
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பெண்களுக்கு பாதுகாப்பான பயணத்தை வழங்குவதற்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தற்காப்புக் கலைகளில் பயிற்சி பெற்ற பெண் பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட பிங்க் ஸ்குவார்ட என்ற பாதுகாப்பு சேவையை இன்று பிப்ரவரி 15ம் தேதி அறிமுகம் செய்துள்ளது. இந்தக் குழுவில் முதற்கட்டமாக இருபத்தி மூன்று பெண்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். இவர்கள் மெட்ரோ பயணிகள் அதிகமாகப் பயணிக்கும் ரயில் நிலையங்களில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
பாலித் தீவிற்கு சுற்றுலா செல்ல வரி - இந்தோனேசியா அறிவிப்பு
இந்தோனேசியாவிற்கு சுற்றுலாப் பயணம் செல்பவர்களில் அதிக மக்கள் செல்லும் இடமாக பாலித் தீவு திகழ்கிறது. ஆஸ்திரேலியா, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் இங்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்கின்றனர் . இந்நிலையில் பாலித் தீவுக்கு சுற்றுலா வருபவர்கள் பத்து டாலர் சுற்றுலா வரி கட்டவேண்டும் என்று இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. சுற்றுலா சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக இந்த வரி விதிக்கப் படுகிறது என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
உலகின் பெரிய பொருளாதாரநாடுகள் பட்டியலில் மூன்றாவது இடத்தை இழந்த ஜப்பான்
உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருந்தன. இந்நிலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக தற்போது ஜப்பான் மூன்றாவது இடத்திலிருந்து நான்காவது இடத்திற்கு சென்றுள்ளது . அதேநேரத்தில் ஜெர்மனி மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த வரிசையில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது
Wednesday Feb 14, 2024
இந்தியா அமெரிக்கா இடையே சிறந்த இராணுவ உறவு - பென்டகன் தகவல்
இந்திய இராணுவ தலைமைத் தளபதி அமெரிக்க்காவுக்கு நான்கு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் இரு நாடுகளின் இராணுவ உறவுகள் குறித்து பென்டகனின் ஊடக துணை செயலாளர் கூறும்போது , நாங்கள் இந்தியாவுடன் சிறந்த இராணுவ ஊறவைக் கொண்டுள்ளோம் என்றும், நாங்கள் இந்தியாவில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் கூறினார். இந்திய இராணுவ தலைமைத் தளபதி, அமெரிக்க இராணுவ தலைமைத் தளபதியுடன் உயர் மட்ட ஆலோசனைகளை மேற்கொள்வார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சாம்பல் புதன் - தேவாலங்களில் சிறப்புப் பிரார்த்தனை
இயேசு சிலுவையில் அறையப் பட்டதை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்களால் தவக்காலம் கடை பிடிக்கப் படுகிறது. இந்த தவக்காலத்தின் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் அனுசரிக்கப் படுகிறது. சாம்பல் புதனை முன்னிட்டு இன்று உலகெங்கினும் தேவாலங்களில் பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன
Tuesday Feb 13, 2024
பெண் நீதிபதியான பழங்குடி பெண்ணிற்கு முதல்வர் வாழ்த்து
திருவண்ணாமலை புலியூர் மலை கிராமத்தைச் சேர்ந்த 23 வயதான ஸ்ரீமதி என்ற பெண் பிஏ, பி எல் சட்டப் படிப்பை முடித்து சிவில் நீதிபதித் தேர்வில் வெற்றி பெற்று நீதிபதி ஆகியுள்ளார். அவருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், பெரிய வசதிகள் இல்லாத மலை கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் இளம் வயதிலேயே இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்
பாகிஸ்தானில் அமையும் எந்த அரசுடனும் இணைந்து பணியாற்றத் தயார்-அமெரிக்கா
பாகிஸ்தானில் கடந்த வாரம் நடந்த பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலவி வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் எந்த அரசு அமைந்தாலும் அதனுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளோம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது
Monday Feb 12,2024
கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப் பட்ட இந்திய கடற்படை வீரர்கள் விடுதலை
கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கத்தார் அரசு கைது செய்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தது. இந்நிலையில் இந்திய வெளியரவுத் துறை கத்தார் நாட்டிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் பயனாக
எட்டு முன்னாள் கடற்படை வீரர்களையும் கத்தார் அரசு விடுதலை செய்தது. விடுதலை செய்யப் பட்ட எட்டு பேரும் 12ம் தேதி திகட்கிழமை புது டெல்லி வந்து சேர்ந்தனர்.
Sunday Feb 11, 2024
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் - சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா
தென்னாப்பிரிக்காவில் நடந்தை பதினைந்தாவது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பதினாறு அணிகள் பங்கேற்ற நிலையில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அரை இறுதிக்குத் தகுதிபெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி பிப்ரவரி 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெனோனியில் நடை பெற்றது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி ஐம்பது ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 253 ரன்கள் எடுத்தது . அடுத்து விளையாடிய இந்திய அணி 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்றி பெற்று சாம்பியன் பட்டதைக் கைப் பற்றியது.
Saturday Feb 10, 2024
கல்வி கற்க எங்கள் நாடு பாதுகாப்பானது - அமெரிக்கத் தூதர்
படிப்பதற்கும் பாதுகாப்பாக இருப்பதற்கும் அமெரிக்கா ஒரு அற்புதமான இடம் என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கூறினார். அவர் மேலும் கூறுகயில் உலகில் உள்ள எந்த நாட்டையும் விட அதிகமான இந்தியர்கள் அமெரிக்காவில் படிக்கின்றனர். கடந்த ஆண்டு இரண்டு லட்சம் விசாக்கள் வழங்கப் பட்டன. கல்வி கற்க எங்கள் நாடு பாதுகாப்பானது என்பதை இந்தியர்கள் புரிந்து கொள்வாரகள் எனபதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். என்று அவர் கூறினார்.
Friday Feb 9, 2024
விண்வெளி நிலையம் அமைக்க பணிகளைத் தொடங்கியது இஸ்ரோ
விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. சீனாவும் விண்வெளிநிலையத்தை அமைத்துள்ளது. மூன்றாவதாக இந்தியாவும் சொந்தமான விண்வெளி நிலையம் அமைக்க இஸ்ரோ தனது பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இந்த விண்வெளி நிலையம் இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு 2035ம் ஆண்டிற்குள் செயல் பாட்டிற்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.
Thursday Feb 8, 2024
புதிய கால நிலை செயற்கைக் கோளை செலுத்திய நாசா
உலகின் பெருங்கடல்கள் மற்றும் வளிமண்டலத்தை விரிவாக ஆய்வு செய்வதற்காக பேஸ் என்ற புதிய காலநிலை செயற்கைக் கோளை நாசா பிப்ரவரி 8ம் தேதி வியாழக் கிழமை விண்ணில் செலுத்தியது . சுற்று வெட்டப் பாதையை நிலை நிறுத்தப் பட்ட இந்த சீயற்கைக் கோள் பூமியிலிருந்து 420 மைல்கள் உயரத்தில் பறந்த படி கடற்பகுதி மற்றும் வழி மணடலத்தை சுமார் மூன்று ஆண்டுகள் ஆய்வு செய்யும். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த செயற்கைக் கோள் பூமியைத் தெளிவாகக் காட்டும் என்று விஞ்ஞானி வெர்டெல் தெரிவித்தார்.
வேலை நேரம் ம்முடிந்தபின் நிறுவனத்தின் அழைப்பை நிராகரிக்க உரிமை - புதிய சட்டம்
தொழிலார்கள் வேலை நேரம் முடிந்து சென்ற பின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள்,மின்னஞ்சலகள் போன்றவற்றை நிராகரிக்க உரிமை வழங்கும் புதிய சட்டம் ஆஸ்திரேலியாவில் கொண்டு வரப் பட்டுள்ளது. இதன் படி நியாயமான காரணமாக இருந்தால் அழைப்புக்கு பதில் அளிக்கலாம். நியாயமற்ற காரணமாக இருந்தால் அழைப்பை நிராகரிக்கலாம். ஆஸ்திரேலியா பசுமைக் கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த புதிய சட்டத்திருத்தம் ஓரிரு நாட்களில் நிறைவேற்றப் படலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.
Wednesday Feb 7, 2024
தற்காப்புப் போருக்குத் தயார் - போலந்து எச்சரிக்கை
ரஷ்யா உக்ரைன் போர் நடந்து வரும் சூழலில் போலந்து நாட்டின் கிழக்கு எல்லையில் வார்சாவிற்கும் மாஸ்கோவிற்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் போலந்து நாட்டின் இராணுவ டாங்க்கிகள், கவச வாகனங்கள், போர் விமானங்கள் போலந்து வான் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றன என்றும், தற்போதைய சூழலில் நாங்கள் தற்காப்பு நடவடிக்கையாக போருக்குத் தயார் நிலையில் இருக்கிறோம் என்றும், ரஷயா உக்ரைனில் வெற்றி பெற்றால் உலக ஜனநாயகத்திருக்கு ஒரு பெரும் பிரச்னையாக அது இருக்கும் என்றும் போலந்து பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
காசா போர் நிறுத்தம் தொடர்பாக சவூதி மற்றும் எகிப்து நாடு தலைவர்களுடன் பிளிங்கன் பேச்சு
காசா போரை முடிவுக்குக் கொண்டுவர கடந்த திங்கட்கிழமை சவூதி அரேபியா வந்த அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் பிளிங்கன், சவுதி இளவரசர் முஹமது பின் சல்மான் மற்றும் எகிப்து அதிபர் அல்சிசியுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சுற்றுப் பயணத்தின் போது காஸாவில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கும், ஹமாஸ் இஸ்ரேல் இடையே கைதிகள் பரிமாற்றம் கொள்வதற்கும் வசதியாக சண்டையை உடனடியாக நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தை உருவாக்க பிளிங்கன் தலைமையிலான குழு முயற்சிக்கும் என்று அமெரிக்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்
Tuesday Feb 6, 2024
18 கலைஞர்களுக்குக் கலைச் செம்மல் விருது
உலக பாரம்பரிய அமைப்பான யுனெஸ்கோ சென்னையை இசை நகரமாக அறிவித்திருந்தது. இதைக் கொண்டாடும் விதமாக சென்னை இசைக் கல்லூரியில் 5ம் தேதி திங்கட் கிழமை இசை விழா நடத்தப்பட்டது. இதில் மரபு ஓவியம், மரபு சிற்பம், நவீன ஓவியம், நவீன சிற்பம் என்னும் பிரிவுகளில் 18 சிறந்த கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகள் வழங்கப்பட்டன. அமைச்சர் சாமி நாதன் விருதுகள் வழங்கி கவுரவித்தார்.
இருள் அடைந்த காசாவிற்கு ஒளி தரும் இளம் விங்ஞானி
இஸ்ரேலின் தாக்குதலால் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகிய நிலையில் , அதில் கிடைத்த பொருட்களை வைத்து பதினைந்து வயதான குஸாம் அல் அத்தார் என்ற சிறுவன் மின்சாரம் தயாரித்து சாதனை படைத்துள்ளான். இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்காகக் காற்று மூலம் மின்சாரம் தயாரிக்க வழி வகை செய்துள்ளார். இந்த சிறுவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து கொண்டிருக்கின்றன
Monday, Feb 5, 2024
இந்திய சக்தி இசைக் குழுவிற்கு கிராமி விருது
லாஸ் ஏஞ்செல்ஸில் நடந்து வரும் 66வது கிராமி விருதுகள் வழங்கும் விழாவில் கிராமி விருதுகள் அறிவிக்கப் பட்டு வருகின்றன. இசை, பாப், ராக், நடனம் என பல்வேறு பிரிவுகளில் ஆண்டு தோறும் விருதுகள் வழங்கப் பட்டு வருகின்றன. இந்த ஆண்டிற்கான கிராமி விருது வழங்கும் விழாவில், சங்கர் மஹாதேவன், விநாயக் ராம், செல்வ கணேஷ், கணேஷ் ராஜ கோபாலன், உஸ்தாத் ஜாஹிர் ஆகியோரைக் கொண்ட சக்தி இசைக் குழுவின் திஸ் மொமெண்ட் (This Moment) என்ற இசை ஆல்பத்திற்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Sunday Feb 4, 2024
அமேசானில் புதிய செய்யறிவு அறிமுகம்
அமேசானில் நாம் பொருட்களை வாங்க உதவும் செய்யறிவை அமேசான் அறிமுகபப்டுத்தியுள்ளது. ரெபஸ் என்னும் இந்த செய்யறிவு தொழில் நுட்பம் நம்மிடம் எழுத்து வடிவிலான உரையாடல்களை மேற்கொள்ளக் கூடியதாகும். பொருட்களை பற்றி நாம் முழுவதுமாகத் தெரிந்து கொண்டு தரமான பொருட்களை வாங்க உதவும் இந்த ரெபஸ் தொழில் நுட்பம் அமேசானில் கடந்த வெள்ளிக்கிழமை அறிமுகப் படுத்துள்ளது.
Saturday Feb 3, 2024
போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் 6 வது இடங்களில் இந்திய நகரங்கள்
நெதெர்லாந்தைச் சேர்ந்த டாம் டாம் என்ற நிறுவனம் உலகின் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகமாக உள்ள நகரங்கள் குறித்த ஆய்வை நடத்தி 2023ம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் முதல் இடத்திலும், அயர்லாந்தின் டப்ளின் நகரம் இரண்டாவது இடத்திலும், கனடாவின் டொராண்டோ மூன்றாவது இடத்திலும், இத்தாலியின் மிலன் நகரம் நான்காவது இடத்திலும்,பெரு தலை நகர் லீமா ஐந்தாவது இடத்திலும், இந்தியாவின் பெங்களூரு ஆறாவது இடத்திலும், புனே நகரம் ஏழாவது இடத்திலும் உள்ளது அந்த பட்டியலில் அறிவிக்கப் பட்டுள்ளது .
காசா போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்- கத்தார்
இஸ்ரேல் ஹமாசிடையேயான போரில் கத்தார் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையின் காரணமாக கடந்த நவம்பர் 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை போர் நிறுத்தம் மேற்கொள்ளப் பட்டது. அதன் பிறகு இஸ்ரேல் மீண்டும் தாக்குதலைத் தொடர்ந்தது. இந்நிலையில் மீண்டும் போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காக இஸ்ரேல் ஹமாஸிடையே நடைபெற்று வந்த பேச்சு வார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பேச்சு வார்த்தையை நடத்தி வரும் கத்தார் நாடு அறிவித்துள்ளது
Friday Feb 2, 2024
மார்க்கோ போலோவின் ஏழாவது நினைவு நூற்றாண்டைக் கொண்டடடும் வெனிஸ் நகரம்
உலகின் புகழ் பெற்ற வணிகப் பயணியான மார்க்கோ போலோவின் ஏழாவது நினைவு நூற்றாண்டை அவர் பிறந்த இத்தாலி நாட்டின் வெனிஸ் நகரம் கொண்டடாடுகிறது. இத்தாலியில் பிறந்தவர் என்றாலும் இந்தியாவை உலகம் அறிய வைத்ததில் பெரும் பங்காற்றியவர் மார்க்கோ போலோ பாண்டியர்கள் மற்றும் தென்னிந்திய வரலாற்றுத் தகவல்களை தம் நூலில் பதிவு செய்து வைத்தவர் மார்க்கோ போலோ. அவரை பெருமைப் படுத்தும் வகையில் அவரின் எல்லாம் நினைவு நூற்றாண்டை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட வெனிஸ் நகர மக்கள் திட்டமிட்டிருக்கிறார்கள்
Thursday Feb 1, 2024
இலங்கையில் அசோகர் தூண் - இந்திய தூதர் அடிக்கல் நாட்டினார்
இலங்கையில் அசோகர் தூண் அமைக்க இலங்கைக்கான இந்திய தூதர் சந்தோஷ் ஜா அடிக்கல் நாட்டினார். இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள பதிவில் இந்தியா இலங்கை இடையேயான கலாச்சார உறவை பலப் படுத்தும் வகையில் வஸ்கடுவவில் உள்ள ராஜகுரு ஸ்ரீ சுகுதி மகா விகாரையில் பேரரசர் அசோகரின் தர்ம தூண் கட்டுமானப் பணிகளை இந்திய தூதர் சந்தோஷ் ஜா அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்
Wednesday Jan 31, 2024
இஸ்ரேல் செல்லும் பத்தாயிரம் இந்தியத் தொழிலார்கள்
கடந்த அக்டோபர் மாதம் முதல் நடந்து வரும் இஸ்ரேல் ஹமாஸ் இடையிலேயான போரினால், இஸ்ரேல் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனை மறு கட்டமைப்பு செய்ய இஸ்ரேல் முடுவு செய்துள்ள நிலையில், அங்கு போதிய மனித வளம் இல்லாததால், வேறு நாடுகளில் இருந்து தொழிலார்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்தியாவிலிருந்து பத்தாயிரம் தொழிலார்கள் பல கட்டங்களாக இஸ்ரேல் செல்ல உள்ளனர்
மலேசியாவின் புதிய மன்னராக சுல்தான் இப்ராஹீம் பதவியேற்ப
மலேசியா மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமத் ஷாவின் பதவிக் காலம் ஜனவரி 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதனால் மலேசியாவின் பதினேழாவது புதிய மன்னராக சுல்தான் இப்ராஹீம் சுல்தான் இஸ்கந்தர் பதவியேற்றார். கோலாலம்பூரில் உள்ள தேசிய அரண்மனையில் அவரதுபதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
Tuesday Jan 30, 2024
ஜெர்மனியில் பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை
ஜெர்மனி பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீள்வதற்காக, பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற புதிய சோதனை முயற்சியை மேற்கொள்ளவிருக்கிறது. வாரத்தில் நான்கு நாட்கள் வேலையும், மூன்று நாட்கள் விடுமுறையும் அளிப்பதால் பணியாளர்களின் உடல் மற்றும் மனநிலை ஆரோக்கியம் அடைவதோடு அவர்களின் செயல் திறனும் அதிகரிக்கும் என ஜெர்மனி எதிர்பார்க்கிறது. பெப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கும் இந்த நடைமுறை சோதனை முயற்சியில் ஜெர்மனியில் உள்ள
நாற்பத்தி ஐந்து நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
மனித மூளையில் சிப் சோதனை தொடங்கிய நியூரா லிங்க் நிறுவனம்
இலான் மஸ்கின் நியூரா நிறுவனம், மனித மூளையில் சிப்களைப் பொருத்தி அவற்றை கணினிகளுடன் இணைப்பதன் மூலம் , மனிதர்களின் பார்வை மற்றும் இயக்கத்தை மீட்டெடுக்க முடியும் என்று கூறியதால் மனிதரிடம் சோதனை நடத்த, அமெரிக்கா உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் அனுமதி கோரிய நிலையில் அதற்கான அனுமதி கிடைத்தது. இதனால் நியூரா லிங்க் நிறுவனம் மனித மூளையில் சிப்பைப் பொருத்தி சோதனையைத் தொடங்கி இருக்கிறது.
Monday Jan 29
2023ல் பதினான்கு லட்சம் இந்தியர்களுக்கு விசா- அமெரிக்கத் தூதரகம் தகவல்
கடந்த 2023ம் ஆண்டு பதினான்கு லட்சம் இந்தியர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காத தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா அமெரிக்கா இடையேயான பரஸ்பரம் நட்புறவு தொடர்ந்து சிறப்பாகவே இருந்து வருகிறது. இதை அடுத்து கடந்த ஆண்டில் இந்தியர்களின் விண்ணப்பங்ளைப் பரிசீலனை செய்து ஹச் ஒன் பி விசா உட்பட 14 லட்சம் விசாக்கள் இந்தியர்களுக்கு வழங்கபப்ட்டது . இது 2022ம் ஆண்டைக் காட்டிலும் 60 சதவீதம் அதிகம். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது .
Saturday Jan 27, 2024
கூடங்குளம் அணு உலைகள் மூலம் இதுவரை 94000 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் நிலையத்தில் உள்ள இரண்டு அணு உலைகள் மூலம் இதுவரை 94,000 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப் பட்டுள்ளது என்றும், கடந்த நிதி ஆண்டில் இரண்டு அணு உலைகள் மூலம் 14,226 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது என்றும், முதல் அணு உலை கடந்த 2021 மார்ச் மாதம் முதல் 638 நாட்கள் தொடர்ந்து இயங்கி மின் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது என்றும் அணு மின் நிலைய வளாக இயக்குனர் R.S.ஷவான்த் கூறினார்
ஹவுதி தாக்குதலால் 42 சதவீதம் சரிந்த சூயஸ் கால்வாய் வர்த்தகப் போக்குவரத்து
இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போரில், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சிப் படையினர் நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் காரணமாக சூயஸ் கால்வாயில் வர்த்தகப் போக்குவரத்து 42 சதவீதம் குறைந்து விட்டதாக ஐநாவின் வர்த்தகப் பிரிவு கவலை தெரிவித்துள்ளது. இது போல் கடல் வணிகம் பாதிக்கப் படுவதால் உணவுப் பொருட்களின் விலைகள் உலக அளவில் உயர்வதற்கான அபாயம் உள்ளதென்று அந்த அமைப்பின் தலைவர் ஜான் ஹாப்மேன் தெரிவித்துள்ளார்.
Friday Jan 26, 2024
குடவோலை முறையை விளக்கும் தமிழக அலங்கார ஊர்தி
டெல்லியில் நடை பெற்ற குடியரசு தின விழாவில் மாநிலங்களின் கலாச்சாரத்தை விளக்கும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடை பெற்றது இதில் குடவோலை முறையை விளக்கும் வகையில் தமிழக அலங்கார ஊர்தி அணி வகுப்பில் வலம் வந்தது. பழங்காலத்தில் யாருக்கு வாக்களிப்பது என்பதை ஓலையில் குறித்து , அது பானையில் சேகரிக்கப்பட்டு, பின்னர் முடிவு அறிவிக்கப் படும் முறைதான் குடவோலை முறை ஆகும்.
பாலஸ்தீனர்களைப் பாதுக்காக்க வேண்டியது - உரிமை சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரிடையே கடந்த அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர் தொடரும் நிலையில் , காஸாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இருபத்தி ஐய்யாயிரத்தைத் தாண்டியுள்ளது. இது தொடர்பாக தென் ஆப்ரிக்கா சர்வதேச நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 26ம் தேதி நடந்த இந்த வழக்கு விசாரணையில், தென் ஆப்ரிக்காவின் நியாயமான கோரிக்கையை ஏற்று , காஸாவில் வசிக்கும் பாலஸ்தீனர்கள் இனப் படுகொலையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உரிமை உள்ளது, இதை சர்வதேச நீதிமன்றம்
அங்கீகரிக்கிறது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது .
Thursday Jan 25, 2024
தமிழகத்தைச் சேர்ந்த பத்திரப்பன் உட்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருது
இந்தியாவின் குடியரசசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது . இதில் தமிழ்நாடு கோவையைச் சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நாட்டுப்புர கலைஞர் பத்திரப்பன் என்பவருக்கு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்ததற்காகவும் இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப் படுகிறது. பத்திரப்பன் உட்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப் பட்டுள்ளது
Wednesday Jan 24, 2024
இன்று ஜனவரி 24ம் தேதி பெண் குழந்தைகள் தினம்
இந்தியாவில் ஆண்டு தோறும் ஜனவரி 24ம் தேதி தேசிய பெண் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய பிரதமர் பெண் குழந்தைகள் தான் மாற்றத்தை உருவாக்குபர்கள், பெண் குழந்தைகள் கல்வி கற்று வளர்ந்து சமூகத்தில் கண்ணியத்துடன் வாழத் தேவையான அணைத்து முயற்சிகளையும் தானுந்து அரசு செய்து வருகிறது எனக் குறிப்பிட்டார்.
சுற்றுலாப் பயணிகள் வருகைப் பட்டியலில் தமிழகம் முதலிடம்
மத்திய சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது, கடைந்த 2021ம் ஆண்டில் இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் மொத எண்ணிக்கை 67.8 கோடி பேர். அதே நேரத்தில் மாநிலங்கள் வாரியாகச் சென்றோரின் பட்டியலில் 15,53 கோடிஎன்ற எண்ணிக்கையில் தமிழ் நாடு முதளிடம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தை 10.97 கோடி பேர் என்ற எண்ணிக்கையுடன் உததிரப் பிரதேசமும், 8.14 கோடி பயணிகள் சுற்றுப் பயணம் செய்த கர்நாடகா மூன்றாவது இடத்தையும், 4.37 கோடி சுற்றுலாப்பயணிகளுடன் மஹாராஷ்டிரா நான்காவது இடத்திலும் உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது
Tuesday Jan 23, 2024
வெளிநாட்டு மாணவர் விசாக்களுக்கு 2 வருட வரம்பு - கனடா புதிய உத்தரவு
கனடாவிற்குக் கல்வி பயில வரும் மாணவர்களுக்கு வழங்கப் படும் விசா காலம் 2 வருடம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கனடாவிற்குக் கல்வி பயில வரும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில், இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது என்றும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35% அளவுக்கு மாணவர் விசாக்களைக் குறைக்க முடிவெடுத்துள்ளோம் என்றும் இதனால் 3.64 லட்சம் மாணவர்களுக்கு மட்டுமே விசாக்கள் வழங்கப் படும் என்றும் இந்த விசா இரண்டு ஆண்டுகள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் கனடா குடியேற்றத் துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்தார்
Monday Jan 22, 2024
மின்மினி என்னும் உலகின் முதல் தமிழ் ஹைப்பர் லோக்கல் செயலி அறிமுகம்!
உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மின் மினி என்ற தமிழ் செயலி ஜனவரி 22ம் தேதி திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மல்டி சானல் மற்றும் நெட் ஒர்க்குகளைக் கொண்ட மின்மினி செயலியானது கான்டென்ட் கிரியேட்டர்களுக்கும், அங்கீகரிகாப் பட்ட செய்தியாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் , சிறந்த சமூக ஊடக தளமாக விளங்கும் என்றும், அங்கீகரிக்கப் பட்ட செய்தியாளர்கள் ப்ளூ டிக் மூலம் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் கூறப் படுகிறது.
Saturday Jan 20, 2024
விக்ரம் லாண்டருடன் தொடர்பை ஏற்படுத்திய நாசா விண்கலம்
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லாண்டரும் பிரக்யான் ரோவரும் தூக்க நிலைக்கு சென்றதாக அறிவிக்கப் பட்டது இந்நிலையில் நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டர்கருவி விக்ரம் லாண்டருடன் லேசர் கற்றை மூலம் தொடர்பை ஏற்படுத்தியதாக, அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா தெரிவித்துள்ளது. இது குறித்து நாசா கூறும்போது, நாசாவின் லூனார் ரீகளைசென்ஸ் ஆர்பிட்டரின் லேசர் அல்ட்டிமீட்டர் கருவி விக்ரம் லாண்டரை சுட்டிக் காட்டியது என தெரிவித்துள்ளது.
Friday Jan 19, 2024
ஜப்பான் விண்கலம் நிலவில் தரை இறங்கியது
நிலவுக்கு ஸ்லிம் என்ற விண்கலத்தை ஜப்பான் கடந்த செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி அனுப்பியது. இந்த விண்கலம் இன்று 19ம் தேதி வெள்ளிக்கிழமை காலை நிலவில் தரை இறங்கியது. நிலவின் மேற்பரப்பில் வெறும் 100 மீட்டர் பரப்புக்குள் தரை இறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விண்கலம் நிலவின் ஸ்னைப்பர் என அழைக்கப் படுகிறது. இந்த விண்கலம் நிலவில் தரை இறங்கியதன் மூலம், நிலவில் வெற்றி கரமாக விண்கலத்தைத் தரை இறக்கிய ஐந்தாவது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெற்றுள்ளது.
Thursday Jan.18 2024
உலகின் மிகப் பெரிய அம்பேத்கார் சிலை ஆந்திராவில் இன்று திறப்பு
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் 125 அடி உள்ள சிலை அமைக்கப்பட்டுள்ளது.இது 81 அடி உயர பீடத்திற்கு மேல் அமைக்கப் பட்டுள்ளதால் இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப் பட்டு, இந்தப் பகுதிக்கு ஸ்மிரிதி வனம் எனப் பெயரிடப் பட்டுள்ளது. சிலை அமைக்கப் பட்டுள்ள மைதானத்தில், அருங்காட்சியகம், மினி தியேட்டர், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. இந்த சிலையை ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று 18ம் தேதி வியாழக்கிழமை திறந்து வைக்கிறார்
Wednesday Jan.17 2024
உலகின் வலிமையான கரன்சி - 10 வது இடத்தில அமெரிக்க டாலர்
உலகின் வலிமையான 10 கரன்சிகளின் பட்டியலை போர்ப்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் குவைத் டினார் முதல் இடத்திலும், பஹரைன் டினார் இரண்டாவது இடத்திலும், ஓமன் ரியால் மூஒன்றாவது இடத்திலும், ஜோர்டான் டினார் நான்காவது இடத்திலும் இடம் பெற்றுள்ளது. இந்த வரிசையில அமெரிக்க டாலர் பத்தாவது இடத்திலும், இந்திய ரூபாய் 15 வது இடத்திலும் உள்ளது.
Tuesday Jan.16 2024
திருவள்ளுவர் தினம்
திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழினத்தில் பிறந்து அவர் தமிழில் அறம் உரைத்து உலகம் முழுமைக்குமான நெறிகள் சொன்ன வான் புகழ் வள்ளுவர் நாள் வாழ்த்துக்கள். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமூக நீதி கோட்பாட்டையும், முயற்சி மட்டுமே வெற்றியைத் தரும் என்ற தன்னம்பிக்கை ஊக்கத்தையும், அரண் எனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற கருத்தியலையும் வழிகாட்டியவர் வள்ளுவர். குரள் நெறி நம் வழி . குறள் வழியே நம் நெறி என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
ஏற்காட்டில் முதல் முறையாக விமானத்திர்க்குள் உணவகம்
சுற்றுலாத் தலமான சேலம் மாவட்டம் ஏற்காட்டில் தனியார் உணவகம் ஓன்று ஒரு விமானத்தை விலைக்கு வாங்கி அதில் உணவகம் நடத்தி வருகிறது. மலைப் பிரதேசத்தில் பெரிய விமானம் ஓன்று இருப்பதைப் பார்க்கும் சுற்றுலாப் பயணிகள் அருகில் சென்று பார்க்கும் போது விமானத்துக்குள் உணவகம் செயல் படுவது தெரிய வருகிறது. இந்த விமான உணவகத்திற்கு கூட்டம் அதிகரித்து வருகிறது. வணிக நோக்கில் வித்தியாசமான முறையில் தனியார் நிறுவனம் செய்துள்ள இந்த ஏற்பாடு சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Monday Jan15 2024
அவனியாபுரம் ஜல்லிகட்டுப் போட்டியில் 17 காளைகளை அடக்கிய வீரருக்கு கார் பரிசு
பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி 15ம் தேதி மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு போட்டி நடைபெற்றது காலை ஏழு மணிக்குத் தொடங்கிய ஜல்லிகட்டுப் போட்டி மாலை 5.15க்கு நிறைவுபெற்றது. இந்தப் போட்டியில் அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 17 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்குக் கார் பரிசாக வழங்கப்பட்டது. இவர் கடந்த ஆண்டு பதினேழு காளைகளை அடக்கி இரு சக்கர வாகனத்தைப் பரிசாகப்பெற்றிருந்தார். அடுத்து அவனியாபுரத்தைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் 14 காளைகளை அடக்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் பத்து காளைகளை அடக்கி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
Sunday Jan 14 2024
சீனப் பெருசுவரில் உலகின்மிக நீளமான ஓவியம் - கின்னஸ் சாதனை படைத்த பெண்
உலக அதிசயங்களில் ஒன்றான சீனாப் பெருஞ்சுவர் ஏறக்குறைய 4000 மைல்கள் தொலைவில் எழுப்பப்பட்ட சுவராகும். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த குவோ ஃபெங் என்ற பெண் ஓவியர் சீனப் பெருஞ்சுவரின் மேல் அறுபது நாட்களுக்கு மேலாக அமர்ந்து 1014 மீட்டர் நீளமுள்ள கேன்வாஸில் காலப்போக்கில் நாகரிகத்தின் வளர்ச்சி என்ற கருப்பொருளை மையமாக வைத்து ஓவியத்தை வரைந்துள்ளார். இதன் மூலம் இந்தப் பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
Saturday Jan.13 2024
உலகின் சிறந்த அரிசியாக பாசுமதி அரிசி தேர்வு
பிரபல உணவு வழிகாட்டி நிறுவனமான டேஸ்ட் அட்லஸ், 2023-24ம் ஆண்டின் உலகின் மிகச்சிறந்த அரிசியாக பாசுமதி அரிசியை அறிவித்துள்ளது. நீளமான, தனித்துவமான, சுவை மற்றும் வாசனை கொண்ட பாசுமதி அரிசி இந்திய துணைக் கண்டத்தில் அதிக அளவில் உற்பத்தி செய்யப் படுகிறது. இந்திய பாசுமதி அரசிக்கு அடுத்த படியாக இத்தாலியைச் சேர்ந்த ஆர்போரியோ அரிசி இரண்டாவது இடத்தையும், போர்ச்சுகலின் கரோலினோ அரிசி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
ஆயிரத்து அறுநூறு ஆண்டு பழமையான வழிபாட்டுத்தலம் கண்டு பிடிப்பு
அமெரிக்காவின் மிசௌரி மாநிலம் செயின்ட் லூயிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் டக்லஸ் தலைமயில் ஒரு குழுவினர் இத்தாலியில் அகழாராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது கான்ஸ்டன்டைன் நகர மக்கள் பேரரசரின் மூதாதையருக்கு அமைத்துக் கொடுத்த வழிப்படுத்தலம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது . இத்தாலி தலை நகர் ரோமிலிருந்து நூற்றி அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஸ்பேல்லோ என்னும் நகரில் 1600 வருட பழமையான இந்த வழிபாட்டுத் தலத்தை டக்லஸ் குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்
Friday Jan12 2024
ஹமாசின் 700 ஏவுகணைத் தளங்கள் அழிப்பு - இஸ்ரேல் அறிவிப்பு
காஸாவில் சோதனைகளில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினரின் நூற்றுக் கணக்காண சிறிய மற்றும் அதிக தூரம் செல்லக்கூடிய ஏவுகணைகளையும், ஏவுகணைத் தளங்களையும் அளித்துள்ளது. அந்த வஃயில் இதுவரை எழுநூறுக்கும் அதிகமான ஏவுகணைத் தளங்களை அழித்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் ஏவுகணைத் திறன்களை அழித்து, இஸ்ரேல் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்து வருவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
Thursday Jan.11 2024
அயலக தமிழர் தின விழா இன்று தொடங்கியது
தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு அயலக தமிழர் தின விழாவை நடத்தி வருகிறது. இவ்விழாவை இன்று ஜனவரி 11ம் தேதி வியாழக் கிழமை சென்னை நந்தம் பாகம் வர்த்தக மையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டலின் தோடங்கி வைத்தார். பதினொன்று மற்றும் பனிரெண்டு ஆகிய இரு தினங்கள் நடை பெறும் இந்த விழாவில் இலங்கை மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய் , இங்கிலாந்து,அமெரிக்கா உட்பட 58 நாடுகளில் இருந்துதமிழ் வம்சா வழியினர் பங்கேற்றுள்ளனர். இந்த விழாவில் வெளிநாடுகளில் உள்ள 218 சர்வதேச தமிழ் சங்கங்கள், 48 பிற மாநில தமிழ் சங்கங்கள் ஆகிய வற்றை சேர்ந்த அயலக தமிழர்கள் பங்கேற்றனர்.
Wednesday Jan.3 2024
சென்னையில் புத்தகக் கண் காட்சி
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில், 47 வது சென்னை புத்தகக் கண் காட்சி நந்தனம் ymca மைதானத்தில் ஜனவரி 3ம் தேதி புதன்கிழமை தொடங்கியது. இந்த புத்தகக் கண் காட்சியை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் தொடங்கி வைத்தார் . இந்த புத்தகக் கண் காட்சி வரும் 21ம் தேதி வரை நடை பெற உள்ளது. இந்த புத்தகக் கண் காட்சியில் மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. கடந்த ஆண்டு புத்தகக் கண் காட்சிக்கு சுமார் 15 லட்சம் பேர் வருகை தந்திருந்த நிலையில், இந்த ஆண்டு 20 லட்சம் பேர் வருவார்கள் என எதிர் பார்க்கப் படுகிறது
புத்தகக் கண் காட்சி
Tuesday Jan.2 2024
குமரி கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை 2 நாட்களில் 15,500 பேர் பார்வை
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக , இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்தனர். கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு படகு சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களில் 15,500 பேர் சுற்றுலாப் படகில் சவாரி செய்து கடல்நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தைக் கண்டு மகிழந்ததாக பூம்புகார் நிர்வாகம் தெரிவித்துள்ளது
Thursday Dec.21 2023
100 அடி உயரத்தில் இந்தியாவின் உயரமான கிறிஸ்துமஸ் மரம்
ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்படும் போது , ஆலயங்கள் வீடுகள் மற்றும் பல இடங்களில் கிறிஸ்துமஸ் மரம் , கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ் ஸ்டார் ஆகியவற்றால் அலங்கரிப்பது வழக்கம். இந்த ஆண்டு கர்ணாவதாக மாநிலம் பெங்களூருவில் பிரபல மால் ஒன்றில் வைக்கப் பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் இந்தியாவின் மிகப் பெரிய மரமாக காண்போரைக் கவர்ந்துள்ளது. இந்த கிறிஸ்துமஸ் மரம் செயற்கை நீரூற்றுக்கு மத்தியில், நூறு அடி உயரத்தில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஓங்கி உயர்ந்து காட்சி அளிக்கிறது. இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் பார்த்தும் , புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர்.
அகதிகள் வருவதைத் தடுக்க பிரான்சில் புதிய சட்டம்
அல்ஜீரியா, போர்ச்சுகல் , மொராக்கோ, துருக்கி உட்பட பல நாடுகளில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்குள் சட்ட விரோதமாக அகதிகள் நுழைவது வழக்கமாக உள்ளது, அகதிகளால் உல் நாட்டுப் பிரச்சனைகள் எழுவதால்,பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கட்சியும், எதிர் கட்சியும் இணைந்து , சட்ட மாற்றங்களைக் கொண்டு வர புதிய மசோதாவைத் தாக்கல் செய்துள்ளது. இது குறித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரான் , அகதிகளால் அமைதியின்மை தோன்றக் கூடிய நிலை இருந்ததாகவும், அதனைத் தடுக்க வெட்னரியது அரசின் கடமை என்றும் , வெள்ளம் போல் நுழையும் அகதிகளைத் தடுக்குக் கவசமாக இந்த சட்டம் அமையும் என்றும் தெரிவித்தார்.
Wednesday Dec.20 2023
எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாஹித்ய அகாடமி விருது
எழுத்தார்களை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு ஆண்டு தோறும் சாஹித்ய அகாடமி விருது வழங்கி வருகிறது. அதன் படி இந்த ஆண்டிற்கான சிறந்த புத்தகங்களுக்கான சாஹித்ய அகாடமி விருது இன்று 20ம் தேதி புதன் கிழமை அறிவிக்கப் பட்டது. இந்த விருது 24 மொழிகளில் வெளிவந்த புத்தகங்களுக்காக அறிவிக்கப்பட்டது. அந்த வாயில் தமிழில் நீர்வழிப் படூஉம் என்ற நாவலுக்காக, எழுத்தாளர் தேவி பாரதிக்கு சாஹித்ய அகாடமி விருது அறிவிக்கப்ப ட்டுள்ளது . விருது அறிவிக்கப் பட்டவர்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் 12 ம் தேதி விருதுகள் வழங்கப் பட உள்ளன.
உலகில் முதல் முறையாக தானியங்கை இயந்திரங்கள் நடத்தும் உணவகம்
கலிஃபோர்னியா மாகாணத்தில் பசடேனா பகுதியில் கலி எக்ஸ்பிரஸ் என்ற தானியங்கை இயந்திரங்கள் நடத்தும் உணவகம் திறக்கப் பட்டுள்ளது. அமெரிக்காவில் தானியங்கி சமையல் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் மிஸோ ரோபோட்டிக்ஸ், கலி குழுமம் மற்றும் பணப் பரிமாற்றத்திற்கு உதவும் பாப் ஐடி ஆகிய மூன்று நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்த உணவகத்தை
செயல் படுத்தி உள்ளன. இங்குள்ள மிசோ ரோபோடிக்ஸ் இயந்திரங்கள், வாடிக்கையாளர்களுக்குத் தேவையான ருசிகரமான உணவுகளைத் தயார் செயகின்றன. பாப் ஐடி தொழில் நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர்களை படம் பிடித்து அவர்களின் வங்கிக்கணக்கிலிருந்து உணவுக்குத் தேவையான பணம் பெறப்படுகிறது
தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட 26 பேருக்கு அர்ஜூனா விருது
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு நாட்டின் இறங்காவது உயரிய விருதான அர்ஜுனா விருது வழங்கப் படுகிறது .இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மது ஷமி , தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி உட்பட 26 பேர் அர்ஜுனா விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
Tuesday, Dec.19 2023
ஐ பி எல் வரலாற்றில் அதிகதொகைக்கு ஏலம் போன மிட்செல் ஸ்டார்க்
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ பி எல் 20 ஓவர் கிரிக்கெட் பதினேழாவது சீசன் போட்டிக்கான மினி ஏலம் கடந்த 19ம் தேதி டுபாயில் நடந்தது. இந்த ஏலப் பட்டியலில் இடம்பெற்றிருந்த 333 வீரர்களில் 77 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அதிக பட்சமாக ஆஸ்திரேலிய அணி வேகப் பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடிக்கு கோல்கட்டா அணியால் ஏலத்தில் எடுக்கப் பட்டார். ஐ பி எல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வீரர் இவ்வளவு அதிக தொகைக்கு ஏலம் போவது இதுவே முதல் முறையாகும்.
ஓராண்டில் 10 கோடி பேர் பயணம் இண்டிகோ சாதனை
ஓராண்டில் 10 கோடி பேர் பயணம் செய்த முதல் இந்திய விமான நிறுவனம் என்ற பெருமையை இண்டிகோ விமான நிறுவனம் பெற்றுள்ளது கடந்த 2022ம் ஆண்டு இண்டிகோ விமானங்களில் 7.8 கோடி பேர் பயணம் செய்த நிலையில், இந்த ஆண்டு இண்டிகோ விமானம் 10 கோடி பேரை ஏற்றிச் சென்று புதிய சாதனை படைத்துள்ளது . கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது 22 சதவீதம் அதிகமாகும். 18ம் தேதி டெல்லி பெங்களூரு விமானப் பயணம் முடிவடைந்த நிலையில் இண்டிகோ இந்த சாதனையை எட்டியுள்ளது .
Monday, Dec.18 2023
போரை நிறுத்த பிரான்ஸ் வலியுறுத்தல்
காசாமீது இஸ்ரேல் தாக்குதல் தொடரும் நிலையில், போரை நிறுத்த பிரான்ஸ் நாடு வலியுறுத்தி உள்ளது. இந்தப் போரில் அப்பாவி மக்கள் அதிக அளவில் கொல்லப் படுவதாக பிரான்ச கடந்த ஞாயிற்றுக் கிழமை வருத்தம் தெரிவித்த நிலையில், அந்நாட்டில் கவலையை பிரான்ஸ் நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா இஸ்ரேலிடம் தெரிவித்தார்.
சுவீடன் நாட்டில் புதிய விசா கட்டுப் பாடுகள்
ஐரோப்பிய நாடுகளில் 27 நாடுகளுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் ஷெங்கன் விசா எனப்படும் ஒரே விசா முறை நடைமுறையில் உள்ளது. இதை சுவீடன் நாடும் அங்கீகரித்து வந்தது. இந்நிலையில் சுவீடெனில் தங்க விரும்புபவர்கள் தாங்களாகவே வேலை தெடிக் கொள்ள வேண்டும் என்றும் , சுவீடன் நாட்டின் சட்டங்கள், கட்டுப்பாடுகள் மற்றும் சமூகக் குறீயியீடுகளைக் குறித்த புரிதல் இருக்க வேண்டுமென்பது கட்டாயம் என்றும், சுவீடிஷ் மொழயில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இனி அனுமதிக்கப் படுவர் என்றும், சுவீடெனில் கல்வி கற்று,வேலையில் சேர்ந்து பணியாற்ற அனைவருக்கும் வாய்ப்பு வழங்கும் விதமாக விசா திட்டங்கள் மாற்றப் படும் என்றும், சுவீடெனில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அறிவித்துள்ளது.
Sunday, Dec.17.2023
ஹோட்டலில் உணவு விநியோகிக்கும் பணியில் ரோபோ
திருப்பூரில் உள்ள ஒரு தனியார் சொகுசு உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு விநியோகிக்கும் பணியில் முதல் முறையாக ரோபோ பயன்படுத்தப் படுகிறது. உணவகத்தில் உள்ள சப்ளையர்கள் வாடிக்கையாளர்களிடம் ஆர்டர் எடுத்து சமையல் செய்பவர்களிடம் வழங்கி, உணவு தயாரானதும் ரோபோவின் அமைக்கப்பட்டுள்ள அலமாரியில் வைக்கப் படுகிறது. ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களின் டேபிள் எண் ரோபோவில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதால், வாடிகையாளர்கள் டேபிள் எண்ணை அழுத்தியதும் அங்கு ரோபோ உணவுகளை எடுத்துச் செல்கிறது
Saturday, Dec.16 2023
துணிச்சலான நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன்-ஜனாதிபதி திரௌபதி முர்மு
பாகிஸ்தானுடன் 1971ம் ஆண்டுப் போரில் இந்தியா வெற்றி பெற்ற தினம் ஆண்டு தோறும் வெற்றிகரமாகக் கடை பிடிக்கப் படுகிறது. வெற்றி தினத்தை முன்னிட்டு இராணுவ முகாமில் டிசம்பர் 15ம் தேதி நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டார். இது குறித்து டிசம்பர் 16ம் தேதி அவர் வெளியிட்டுள்ள பதிவில்,1971 போரின் போது நமது ஆயுதப் படைகள் செய்த தன்னலமற்ற தியாகத்தை தேசம் நன்றியுடன் நினைவு கூறுகிறது. இணையற்ற துணிச்சலை வெளிப்படுத்தி வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியைப் பெற்ற துணிச்சலான நெஞ்சங்களுக்கு வெற்றி தினம் அன்று தலை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஈரான் செல்ல 33 நாடுகளுக்கு விசா தேவையில்லை
இந்தியா உட்பட 33 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஈரான் நாட்டுக்கு சுற்றுலா வர விசா தேவையில்லை என டிசம்பர் 15ம் தேதி அந்நாட்டு அரசு அறிவித்தது. இது குறித்து ஈரான் சுற்றுலாத் துறை அமைச்சர் எஸதுல்லாஹ் சர்காமி கூறுகையில் ஈரானின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன என்றும், இதன் ஒரு பகுதியாக இந்தியா உட்பட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு ஈரான் வருவதற்கு விசா தேவையில்லை என அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளதாகவும் கூறினார்.
Friday, Dec.15 2023
இஸ்ரேல் தாக்குதலால் காஸாவில் இணைய சேவை முடக்கம்
ஹமாஸ் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் ஏறக்குறைய இரண்டரை மாதங்களாக நடந்து வருகிறது. காஸாவின் வடக்கு , மத்திய மற்றும் தெற்கு காசா என அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில் காஸாவில் மீண்டும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது என்றும், காசாவில் அரசாங்க ஊடக அலுவலக தகவல் தொடர்பு முடக்கப் பட்டதால், பலியான மக்கள் மற்றும் காயம் அடைந்தவர்களை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும் என்றும் பாலஸ்தீன தொலைத்த தொடரபு நிறுவனங்கள் கூறியுள்ளன
Thursday Dec.14.2023
ஒடிசாவில் ஐந்து ரூபாய் கட்டணத்தில் அதி நவீன பேருந்துப் பயணம்
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மலிவு விலை கட்டணத்தில் அதி நவீன பேருந்து சேவையை முதற்கட்டமாக ஒடிசாவில் கோரபத் மாவட்டத்தில் அறிமுகம் செய்துள்ளார். கிராமப்புறங்களில் இருந்து மாவட்டத்தின் தலைநகருக்கு செல்ல விரும்பும் பெண்கள் மாணவர்கள் , மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஐந்து ரூபாய் கட்டணத்தில்இந்த பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். முதற்கட்டமாக ஆறு மாவட்டங்களில் 234 கிராமப் பஞ்சாயத்துகளைச் சேர்ந்த மக்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான கொட்டுக்காளி திரைப்படம்
நடிகர் சூரி கதாநாயகனாக நடித்த சிவா கார்த்திகேயன் ப்ரொடக்க்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் ப்ரொடக்க்ஷன்ஸ் இணைந்து தயாரித்த கொட்டுக்காளி திரைப்படம் எழுபத்தி நான்காவது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வாகியுள்ளது. இதன் மூலம் பெர்லின் சர்வதசே திரைப்பட விழாவில் தேர்வான முதல் தமிழ்திரைப் படம் என்ற பெருமையை கொட்டுக்காளி திரைப்படம் பெற்றுள்ளது.
Wednesday, Dec.13 2023
காஸாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தது இந்தியா
காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் இரண்டு மாதத்துக்கும் மேலாக நடந்து வருகிறது. இந்நிலையில், காசாவில் உடனடியாக மனிதாபிமானப் போர் நிறுத்தம் கோரி, பொது மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலை நிறுத்துதல் என்ற தீர்மமானத்தை ஐக்கிய நாடுகள் பொது சபை ஏற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து மத்திய கிழக்கிற்கான ஐக்கியநாடுகளின் பொதுச்சபை அவசர அமர்வில் இந்தியா போர் நிறுத்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தது.
போலந்து நாடு பிரதமராக டொனால்ட் டஸ்க் பதவியேற்பு
போலந்தில் கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி நடை பெற்ற பொதுத் தேத்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் மத்தியவாதக் கட்சித் தலைவர் டொனால்டு டஸ்க் தலைமையில் அரசு அமைக்க கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் டிசம்பர் 12ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் டொனால்டு டஸ்க் தலைமையிலான அரசுக்கு ஆதரவு கிடைத்து வெற்றி பெற்றதால் இன்று 13ம் தேதி புதன் கிழமை நடந்த பதவியேற்பு விழாவில் டொனால்டு டஸ்க் பிரதமராகப் பதவியேற்றார்.