கனவுகள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்
பொதுவாக இரவில் நாம் தூங்கும்போது வரும் கனவுகளில் பாதிக்கும்மேல் 5 நிமிடங்கள் வரை தான் நம் நினைவில் இருக்கும். 90 சதவீதம் கனவுகள் 10 நிமிடங்களுக்குப் பின் நாம் மறந்து விடுகிறோம். 3 வயது வரை குழந்தைகளுக்கு தங்களைப் பற்றி எந்த கனவுகளும் வருவதில்லை. பொதுவாக கனவுகள் 10 முத்த 15 நிமிடங்கள் வரை நீடிக்கும் . இரவில் வெகு நேரம் விழித்திருந்து தாமதமாகத் தூங்கப் போகிறவர்களுக்கு அதிகமாகக் கனவுகள் வரும். சராசரியாக ஒருவருக்கு 4 கனவுகள் வரை ஒரு இரவு வரும். அப்படிப் பார்க்கும் போது ஒரு வருடத்துக்கு 1460 கனவுகள் வருகிறது. நாம் தூங்கும் இடம் குளிராக இருந்தால் தேவையில்லாத கனவுகள் வருவதற்கு நிறைய வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப் படுகிறது. பறப்பது மாதிரி நமக்குக் கனவுகள் வந்தால் நம்முடைய சக்தி , சந்தோஷம் மற்றும் சுதந்திரம் இவைகளை வெளிக்காட்டும் அடையாளமாக சொல்லப்படுகிறது. பறப்பது மாதிரி கனவுகள் வந்தால் சந்தோசம் நம்பிக்கை பலம் இந்த மாதிரி உணர்வுகள் கொடுக்கும் அதுவே ஓடுவது மாதிரி கனவுகள் வந்தால் பயம் பிடிக்கவில்லை போன்ற உணர்வுகள் தரும்.
Copyright © 2020 NJ sunrise tamil radio - All Rights Reserved.