• Home
  • HEALTH
  • BIZARRE
    • BOLLYWOOD
    • KOLLYWOOD
    • HOLLYWOOD
  • inspirational
  • LIVE RADIO
    • Home
    • HEALTH
    • BIZARRE
    • CINEMA
      • BOLLYWOOD
      • KOLLYWOOD
      • HOLLYWOOD
    • inspirational
    • LIVE RADIO
  • Home
  • HEALTH
  • BIZARRE
  • inspirational
  • LIVE RADIO
image1012

இசைப் பள்ளிக்கு எஸ்.பி.பி பெயர்: ஆந்திர அரசு அறிவிப்பு

இசை மற்றும் நாட்டிய பள்ளிக்கு மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் பெயரைச் சூட்டி ஆந்திர அரசு கவுரவம் செய்து

(NJS) மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்கள்  ஒரு தன்னிகரில்லா பாடகராக மதிக்கப்பட்டவர். இசைத்துறையிலும், சினிமாத் துறையிலும்   எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆற்றிய பங்களிப்பை பாராட்டும் வகையில், ஆந்திரா அரசு  நெல்லூரில் உள்ள அரசு இசை  மற்றும் நடன பள்ளியை

  'டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அரசு இசை மற்றும் நடன பள்ளி' என்று பெயர் மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளது. 


பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்குப் பிறகு அவருக்கு பாரத ரத்னா விருது, தாதா சாகேப் பால்கே விருது, அவர் பெயரில் தேசிய விருது வழங்கப்பட வேண்டும் என்று திரையுலகினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். 

ஆனால், அதற்கு மத்திய அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.   இந்நிலையில்   ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எஸ்.பி.பிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்.


 இந்நிலையில் நெல்லூரை பூர்வீகமாகக் கொண்ட எஸ்.பி.பி.யை கவுரவிக்கும் பொருட்டு நெல்லூரில் உள்ள அரசு இசை மற்றும் நாட்டிய பள்ளி பெயரை டாக்டர் எஸ். பி.பாலசுப்ரமணியம் இசை மற்றும் நாட்டிய பள்ளி என்று பெயர்மாற்றம் செய்ய ஆந்திர  மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இது தொடர்பாக ஆந்திர தொழில், வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் கவுதம் ரெட்டி தனது சமூக வலைதளப்பக்கத்தில் இதைத் தெரிவித்துள்ளார்.


அவர் கூறும்போது, பாடகர் எஸ்.பி.பி, புகழ்பெற்ற பாடகர். அவருடைய பல்வேறு இசை திறமைகளை அங்கீகரிக்கிறோம். இதையடுத்து, நெல்லூர் அரசு இசை மற்றும் நடனப் பள்ளிக்கு, டாக்டர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அரசு இசை மற்றும் நடனப் பள்ளி என்று

 பெயரை மாற்றி வைக்க முடிவு செய்துள்ளோம்' என்று தெரிவித்துள்ளார்.


இந்த அறிவிப்பு எஸ்.பி.பி.யின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலர், லெஜண்டரி பாடகரான எஸ்.பி.பிக்கு ஆந்திர அரசு செய்திருக்கிற உண்மையான அஞ்சலி இது. அவர் பூர்வீக வீடு இருக்கும் சாலைக்கு அவர் பெயர் வைக்கலாம் எனவும் கூறியுள்ளனர். 

இந்நிலையில்,   ஆந்திர அரசின் அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு, எஸ்.பி.பியின் மகன் சரண்தனது ட்விட்டர் பதிவில் நன்றி தெரிவித்துள்ளார்.

Learn More

This is a content preview space you can use to get your audience interested in what you have to say so they can’t wait to learn and read more. Pull out the most interesting detail that appears on the page and write it here.

Find out more
image1013

சூர்யா மற்றும் கவுதம் மேனன் இணையும் வெப்தொடர்

சூர்யா மற்றும் கவுதம் மேனன் இணையும் வெப்தொடர்

(NJS) 'நவரசா' குறும்படத் தொகுப்பில் சூர்யா நடிக்கும் படப்பிடிப்பு குறித்து ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பதிவிட்டுள்ளார்.


 சூர்யா மற்றும் இயக்குனர்  கவுதம் மேனன் இணையும் திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த நிலையில் திடீரென அந்த படம் நிறுத்தப்பட்டது.


இந்த நிலையில் தற்போது மீண்டும் சூர்யா மற்றும் கவுதம் மேனன் இணைந்து உள்ளதாகவும்,  கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெப்தொடர் ஒன்றில் சூர்யா நடித்து வருவதாகவும் இதன் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாகவும் பிரபல ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் , தான் பணியாற்றும் கௌதம் மேனனின் குறும்படம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 


 கோவிட்-19 நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ஒரு முன்னெடுப்பாக,  கடந்த மாதம்  'நவரசா' என்ற ஆந்தாலஜி எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை இயக்குநர்கள் மணிரத்னம், ஜெயேந்திரா இருவரும் தயாரிக்கின்றனர்.. இந்தத் திரைப்படத்தில் பங்காற்றும் அத்தனை கலைஞர்களும், நிறுவனங்களும், திரைத்துறைக்கு ஆதரவு தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், இலவசமாகப் பணியாற்றியுள்ளனர்.  நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த ஆந்தாலஜியை,  ஒன்பது நவரசங்களையும் வைத்து ஒன்பது  கதைகளை ஒன்பது இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.


வெப்தொடராக இருந்தாலும் மீண்டும் சூர்யா மற்றும் கவுதம் மேனன் இணைந்துள்ளது இரு தரப்பு ரசிகர்களுக்கும், பி.சி.ஸ்ரீராமின் இந்த ட்வீட் மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது. இந்த தொடர் விரைவில்  நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் என்று 

எதிர்பார்க்கப்படுகிறது.

image1014

சூர்யாவின் சூரரை போற்று ரிலீஸ்

நடிகர் சூர்யா, நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படம் இன்று ரிலீஸ்.

(NJS) நடிகர் சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று  திரைப்படம்  இன்று வெளியாகியுள்ளது. அவரது 2டி நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை, இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா  இயக்கியுள்ளார். 


ஏழை மக்களையும் விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்ற இளைஞரின் கனவு நிஜமாவதே படத்தின் கதையாகும். 

ஏர்டெக்கன் என்ற விமான நிறுவனத்தின் நிறுவனரான, கேப்டன் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதையைத் தான் சூர்யா படத்தில் நடித்துள்ளார். இந்தியா பாகிஸ்தான் போர் உள்ளிட்ட முக்கிய போர்களில் பங்கேற்றவர் ராணுவ கேப்டன் கோபிநாத். கர்நாடக

 மாநிலம் ஹசனா மாவட்டம் கொரூரு என்ற கிராமத்தில் பிறந்த கோபிநாத், கன்னட வழியில் படித்து, தனது கனவான ஏர்டெக்கன் நிறுவனத்தை 2003ல் நிறுவினார். இலக்கை நோக்கி தாம் பயணித்தபோது கடினமான தருணங்களை கேப்டன் கோபிநாத்

 'Simply Fly' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


புத்தகத்தை படித்த இந்தி தயாரிப்பாளர் குனீத் மோங்கா இதனை படமாக்க நினைத்தார். இதற்காக கோபிநாத்திடம் உரிமத்தை கோரியுள்ளார். 

முதலில் தனது வாழ்க்கை வரலாற்றை படமாக்க தயங்கிய கோபிநாத், பின்னர் இந்தியில் எடுக்க சம்மதித்தார். தமிழ்திரையுலகத்தில் இருந்து அழுத்தம் அதிகரித்ததால் முதலில் இப்படம் தமிழில் தயாராகியுள்ளது. அடுத்தாண்டு இந்தப் படம் இந்தியில் வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.


புதன்கிழமை (இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு) அமேசான் பிரைம் ஓடிடி-யில் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் முன்தினமே பத்திரிகையாளர்கள் மற்றும் திரையுலக விஐபி-க்களுக்கு போட்டுக் காண்பிக்கப்பட்டது. பலரும் இந்தப் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனத்தை வெளியிட்டதால்  சூரரைப் போற்று படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது . 


சூர்யாவுடன் அபர்ணா பாலமுரளி, மோகன்பாபு, உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்தப் படத்திற்காக  ஒரு விமானம் மட்டுமே தினமும் ரூ47 லட்சம் வாடகைக்குசுமார் 2 வார காலத்திற்கு  எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே எதிர்பார்த்ததைவிட பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருக்கிறது.


சூர்யா ரசிகர்களும் இந்தப் படத்தைக் காண ஆவலுடன் இருக்கிறார்கள். 


image1015

மிஸ் இந்தியா கீர்த்தி சுரேஷ்!

மிஸ் இந்தியா- கீர்த்தி சுரேஷ் .

 (NJS)  கீர்த்தி சுரேஷ்  நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் மிஸ் இந்தியா.  ஈஸ்ட் கோஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது. ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷுடன் ஜெகபதி பாபு, நவீன் சந்திரா, ராஜேந்திர பிரசாத், நரேஷ், நதியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.


 கீர்த்தி சுரேஷின் ‘ ‘மிஸ் இந்தியா’ திரைப்படம் நவம்பர் 4-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


‘மிஸ் இந்தியா’ திரைப்படத்தின் ட்ரெய்லரில் டீ பிசினஸ் செய்யும் தொழில் முனைவோராக கீர்த்தி சுரேஷ் தோன்றுகிறார். ஒரு தொழில் முனைவோராக அவர் எதிர்கொள்ளும் சவால்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

‘மிஸ் இந்தியா’ திரைப்படம் பல இளம்பெண்களை ஊக்கப்படுத்தும் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.


இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் ரஜினிகாந்த்துடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், செல்வராகவனுடன் ‘சாணி காயிதம்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

image1016

இயக்குனர் ஆனார் நடிகை வரலட்சுமி சரத்குமார்

இயக்குனர் ஆனார் நடிகை வரலட்சுமி சரத்குமார்

(NJS) தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகை என்று பெயரெடுத்தவர்  வரலட்சுமி சரத்குமார்.  அவர்  இப்போது  பெண்கள் இயக்குனர் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.


ஹீரோயின் வேடம் தான் என்று இல்லாமல் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் அறிந்து மாறுபட்ட   வேடங்களில்  தைரியமாக  நடித்து  தனக்கென ஒரு இடத்தை பிடித்திருப்பவர் வரலட்சுமி சரத் குமார். நடிப்பில் தனக்கென தனி முத்திரை பதித்து வரும் இவர்  ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்  என்.இராம சாமி  தாயாரிக்கும்  " கண்ணாமூச்சி" என்ற படத்தில், இதுவரை ஏற்று நடிக்காத மாறுபட்ட வேடமேற்று திரைக்கதை அமைத்து  இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பெண் இயக்குனரும் இவர் தான். 


வரலட்சுமி இயக்கி நடிக்கும் " கண்ணாமூச்சி" படதின் பர்ஸ்ட்  லுக்  தலைப்பை இன்று அக்டோபர் 18ம் தேதி  காலையில் அரசியல், சமூகம், மற்றும் திரை உலகை சார்ந்த 50 பெண் பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டு சாதனை படைத்தனர். 


படத் தலைப்பை வெளியிட்ட பெண் பிரபலங்கள்: பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சங்கீதா விஜய், கிருத்திகா உதய்நிதி, ராதிகா சரத்குமார், குஷ்பு சுந்தர், சுகாசினி மணிரத்தினம், ஹேமா ருக்மணி, ரம்யா சுப்ரமணியம், ரேவதி, ஜோதிகா, சமந்தா, திரிஷா, சிம்ரன், சினேகா, தமன்னா, லட்சுமி ராய், ஹன்சிகா, டாப்சி, அபிராமி, சாய் பல்லவி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், கீர்த்தி சுரேஷ், ரெஜினா, காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன், அதிதிரவிசந்திரன், பாவனா, திவ்யதர்ஷினி (டி.டி.) சோனியா அகர்வால், ரம்யா நம்பீசன், சாயிஷா, அதிதிராவ் ஹைதிரி, ஆர்த்தி ரவி, லட்சுமி மஞ்சு, சுஜாதா, கீதாஞ்சலி, கிக்சோனு, சின்மயி, அப்சரா ரெட்டி, சாரதா ஸ்ரீநாத், பிருந்தா மாஸ்டர், வாசுகி, டைரக்டர் காயத்ரி, ஜோஷ்னா சின்னப்பா, சிபி ஸ்ரீதேவி, ஆகிய ஐம்பது பேர் தான் அவர்கள் இதுவும் ஒரு சாதனைதான்.

Copyright © 2020 NJ sunrise tamil radio - All Rights Reserved.